பாடல் எண் :1818
கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாயுயி ராயவன்
எண்நி றைந்த வெறும்பியூ ரீசனே.

9
பொ-ரை: எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன், கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும், விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும், உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன்.
கு-ரை: கண் நிறைந்த - கண் பார்வைக்குச் சிறந்த. கனம் - திரண்ட. பவளத்திரள் - பவளங்களின் தொகுதி. உள் நிறைந்து - மனத்திற்குள் நிறைந்து. உருவாய் - என் வடிவமாய். எண் நிறைந்த - என் எண்ணத்தில் நிறைந்த.