பாடல் எண் :1823
மிக்க னைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே.

4
பொ-ரை: அனைத்துத் திக்குகளும் மிகுந்து அருவிகள் புகுந்து பெருகுதலால் காவிரி போந்த புனற்கரையின் கண் கொக்குச் சாதிகள் பயிலும் சோலையை உடைய குரக்குக்காவின்கண் திகம்பரனாய பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும்.
கு-ரை: அனைத்துத்திசையும் மிக்கு - எல்லாத் திசைகளிலும் சென்று மிகுந்து. அருவிகள் புக்குக் காவிரிபோந்த - பல அருவிகளைக்கொண்டு பெரிதாகிக் காவிரியாறு ஓடிவந்த. புனற்கரை - தண்ணீர்க் கரையில். இனம் - கூட்டம்.