|
பாடல் எண் :1827 | செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார் அக்க ரையரெம் மாதி புராணனார் கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா நக்க னைத்தொழ நம்வினை நாசமே. |
| 8 | பொ-ரை: செவ்வானத்தைப் போன்றெழுகின்ற சிவந்த சுடர் வீசும் சோதியாரும், அக்கு மணியை இடுப்பில் அணிந்துள்ளவரும், ஆதியிலே தோன்றிய பழமை உடையவரும், கொக்குச் சாதிகள் வயலில் சேர்கின்ற குரக்குக்காவின் திகம்பரனுமாய பெருமானைத் தொழ நம்வினை நாசமாம். கு-ரை: செக்கர் அங்கெழு - அந்திவானத்தின் அழகு கெழுமிய. அக்கரையர் - அக்குமணிகளை இடையிலே கட்டியவர். ஆதி புராணனார் - பழமையான முதல்வர். |
|