|
பாடல் எண் :1830 | திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாம் கருவ னாகி முளைத்தவன் கானூரில் பரம னாய பரஞ்சுடர் காண்மினே. |
| 1 | பொ-ரை: கானூரில் தெய்வச்சுடராகிய இறைவன் திருமகள் கணவனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உறைகின்ற அழகுடையவனாகிய பிரமனும் ஆகி உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் கருவிலேயே உற்றுக் காப்பவனாகி முளைத்தவன் ஆவன். கு-ரை: திருவின் நாதனும் - திருமகள் கணவனாகிய திருமாலாயும். உருவனாய் - உலகத்தின் உயிரெலாம் படைக்கும் பிரமனாயும்; உலகத்தின்கண் உள்ள எல்லா உயிர்கட்கும் உரு உடம்போடு வந்து அருள் செய்பவனாயும் எனலுமாம். கருவனாய் - எல்லாவற்றிற்கும் கருப்பொருளாயும். முளைத்தவன் - தோன்றியவன். பரமனாய - மேலானவனாகிய. பரஞ்சுடர் - சிவபரஞ் சுடரேயாவன். |
|