|
பாடல் எண் :1831 | பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி உண்டின் றேயென்று கவன்மி னேழைகாள் கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப் புண்டரீகப் பொதும்பி லொதுங்கியே. |
| 2 | பொ-ரை: அறிவற்றவர்களே! பெண்டிர், மக்கள் பெருந்துணையாகவுள்ள நல்ல செல்வம் இன்று உண்டு என்று மகிழாதீர்;தாமரையாகிய பொதும்பில் ஒதுங்கியே கானூர் முளையாகிய கடவுளை நீர் கண்டுகொள்வீராக; (அவரே பெருந்துணையாவார்). கு-ரை: பெண்டிர் - மனைவியர். பெருந்துணை - உற்ற விடத்துதவும் பெருமைக்குரிய நண்பர் முதலாயினார். நன்னிதி - நல்ல செல்வம். உண்டின்றே என்று - இன்று உள்ளதே என்று. உகவன்மின் - மகிழ்வு கொள்ளாதீர். ஏழைகாள் - அறியாமையுடையவர்களே. கண்டு கொள்மின் - உள்ளவாறு உணர்ந்து வழிபடுங்கள். கானூர் முளை - கானூரில் தோன்றியிருப்பவன். புண்டரீகப் பொதும்பில் - திருவடியாகிய தாமரைக் காட்டில் தங்கி. கண்டுகொள்மின் என்க. ஒதுங்கி - உலக பந்தபாசங்களின்றும் நீங்கி. |
|