|
பாடல் எண் :1833 | குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண் நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன் அறிய லுற்றிரேல் கானூர் முளையவன் செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே. |
| 4 | பொ-ரை: இரத்தற் குறிப்பொடு நின்று ஏற்று உண்ணும் ஆடையற்ற அமண்நெறியைவிட்டு நீங்கி எம்பிரான் அருள்நிறையும் கழலைப் பற்றினேன்; அதற்குக் காரணம் அறியலுறுவீரேல், கானூர் முளையாகிய கடவுள் என்சிந்தையில் செறிவு செய்திட்டிருப்பதே ஆகும். கு-ரை: குறியில் - குறிக்கோள் இல்லாத சமண்நெறி என்க. நின்று - மேற்கொண்டு ஒழுகி. கூறை - ஆடை. இலா - இல்லாத. சமண்நெறி - சமண்சமய ஒழுக்கம். நிறைகழல் - காலில் நிறைந்து அணியும் கழல். அறியலுற்றிரேல் - நீவிர் அறிய விரும்பினீரேயானால். கானூர் முளையவன் - கானூரின்கண் எழுந்தருளியிள்ளவன். செறிவு செய்திட்டிருப்பது - பொருந்தி எழுந்தருளியிருப்பது. என் சிந்தையே - என் சிந்தையின் கண்ணேயாகும். |
|