|
பாடல் எண் :1837 | ஓமத் தோடயன் மாலறி யாவணம் வீமப் பேரொளி யாய விழுப்பொருள் காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே. |
| 8 | பொ-ரை: வேள்விகளாலும். திருமாலும், பிரமனும் அறியாதவண்ணம் இடுகாட்டகத்தே பேரொளியாகிய உயர்ந்த பொருளும், காமனைக் காய்ந்தவனும் ஆகிய கானூர் முளைத்த கடவுள் என் சிந்தையே பாதுகாவலுக்குரிய இருப்பாகக் கொள்வன். கு-ரை: ஓமத்தோடு - வேள்வி முதலிய செய்தலோடுகூடியவனாய; ஓம் என்கிற அந்தமந்திரத்தை முதலிலுடைய வேதமும் எனலுமாம். அயன் - பிரமன். வீமப்பேரொளி - மிக்க பேரொளி. காமற்காய்ந்தவன் - மன்மதனை எரித்தவன். சேமத்தால் இருப்பாவது - பாதுகாவலோடு கூடிய அவன் இருக்குமிடமாவது. சிந்தை - மனம். |
|