பாடல் எண் :1847
பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே
.

9
பொ-ரை: பழகினால் வருகின்ற பழமையாய் உள்ள சுற்றத்தாரும் விழவிடாவிட்டால் வேண்டியதை எய்தவொண்ணாது; விளங்குதலைக்கொண்ட சேறையிற் செந்நெறி மேவிய அழகராகிய இறைவர் உள்ளார்; அஞ்சுவது பின்னை எற்றுக்கு?
கு-ரை: பழகினால் - பழக்கத்தால். வரும் - உண்டாய் வரும். பண்டுள - பலகாலமாய் உளதான. சுற்றமும் என்பதிலுள்ள உம்மை உயர்வு குறித்தது. விழவிடாவிடில் - உண்மையானதல்ல என்றறிந்து அவர்கள் நம்மை நீங்கும்படி விட்டுவிடவில்லையானால். வேண்டிய - உண்மையாய் நமக்குத் துணை செய்யும் பொருள் என்று உணர்ந்து விரும்பிய நன்மைகளை. எய்தொணா - அடையமுடியாது. திகழ்கொள் - விளங்குதலைக்கொண்ட.