|
பாடல் எண் :1869 | கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் அக்க ரையின ரன்பிலா லந்துறை நக்கு ருவரும் நம்மை யறிவரே. |
| 5 | பொ-ரை: கொக்கிறகை உடையவரும், குளிர் மதிப் பிறையினைச் சடையிற் கொண்டவரும், சினம்மிக்கு அரக்கர் முப்புரங்களை எரித்தல் செய்தவரும், அக்கினை அரைக்கசைத்தவருமாகிய அன்பிலாலந்துறையில் திகம்பர உருவினராம் இறைவர் நம்மை அறிவர். கு-ரை: கொக்கிறகர் - கொக்கு வடிவில் நின்ற அசுரனை அழித்து அவன் இறகினைச் சூடியவர் சிவபெருமான் ஆதலின் கொக்கிறகர் என்றார். குளிர்மதி - குளிர்ந்த பிறைமதி. மிக்க - செருக்கிய. அரக்கர் - திரிபுராரிகள். புரம் - மூன்று கோட்டைகள். எரிசெய்தவர் - எரியச்செய்தவர். அக்கரையினர் - அக்குமணி மாலையை அரையிலே கட்டியவர். நக்குருவர் - நகுதற்குக் காரணமான தோற்றத்தோடு கூடியவர். நம்மை அறிவர் - நம்மை அறிந்து திருவருள் செய்வர். |
|