|
பாடல் எண் :1871 | பிறவி மாயப் பிணக்கி லழுந்தினும் உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே அறவ னெம்பிரா னன்பிலா லந்துறை மறவா தேதொழு தேத்தி வணங்குமே. |
| 7 | பொ-ரை: பிறவியாகிய பொய்ப்பிணக்கில் அழுந்தினாலும் உறவெல்லாவற்றையும் சிந்தித்து எண்ணி மகிழாமல், அறவடிவாகிய எம்பெருமானது அன்பிலாலந்துறையை மறவாது தொழுது ஏத்தி வணங்குவீராக. கு-ரை: பிறவி மாயப்பிணக்கில் - பிறவியாகிய பொய்மையை உடைய மாறுபாட்டுள். அழுந்தினும் - அழுந்தினாலும். உறவெலாம் சிந்தித்து - உறவினராயவர் எல்லாரையும் எண்ணி. உன்னி - அவர்களையே மீள மீள நினைத்து. உகவாதே - மகிழாமல். அறவன் - அறவடிவன். வணங்கும் - வணங்குங்கள். |
|