|
பாடல் எண் :1875 | சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி நட்ட னைத்தொழ நம்வினை நாசமே. |
| 1 | பொ-ரை: உயர்ந்தவனை, சிவனை, செழுஞ்சோதி வடிவானவனை, எட்டு மூர்த்தியை, கல்லாலநிழற்கீழ் அமரும் ஆசாரியனை, திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனைத் தொழுதால் நம்வினை நாசமாம். கு-ரை: சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன். செழும் -வளவிய. அட்ட மூர்த்தியை - எட்டு வடிவமாக எழுந்தருளியவனை. ஆலநிழல் - கல்லால மர நிழலின்கண். பட்டன் - ஆசாரியன்; ஞானி. நட்டன் - நடனமாடுபவன். நாசம் - அழியும். |
|