|
பாடல் எண் :1877 | ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி ஈச னேயெனு மித்தனை யல்லது பேசு மாறறி யாளொரு பேதையே. |
| 3 | பொ-ரை: ஒரு பெண் ஊசல் விளையாட்டும் கொண்டிலள்; ஒள்ளிய கழல் அணிவாளுமல்லள்; தேசமாம் திருப்பாண்டிக் கொடுமுடி ஈசனே என்னும் இத்தனையேயல்லது வேறு பேசுமாறு ஒன்றும் அறியாதவள் ஆயினள். கு-ரை: ஊசலாள் அல்லள் - ஊஞ்சல் ஆடுபவளாக இல்லை. ஒண்கழலாள் அல்லள் - ஒளிபொருந்திய சிலம்பு முதலிய அணிகலன்கள் அணிந்துகொள்ளுபவளாகவும் இல்லை. தேசமாம் - சிறந்த ஊராகிய. எனும் - என்று சொல்வாள். இத்தனையல்லது - இந்த வார்த்தைகளேயல்லாமல். |
|