|
பாடல் எண் :1888 | ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னங் கழலடி நாட்டி நாண்மலர் தூவி வலஞ்சயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசசெ. |
| 9 | பொ-ரை: ஓட்டைமாடமாகிய உடம்பில் உள்ள ஒன்பது வாயில்களும் இடுகாட்டில் வெந்து எரிந்து சாம்பலாவதன் முன், தன்கழலடியை நெஞ்சில் நாட்டிப் புதுமலர் தூவி வலம் செய்தால் வான்மியூரீசன் வாட்டம் தீர்ப்பான். கு-ரை: ஓட்டை மாடத்தில் - எண்ணிறைந்த ஓட்டைகளை உடைய வீடாகிய உடலில். உருவகம். ஒன்பது வாசலும் - ஒன்பது வாசல்களும். வழிகளாவன; வாய், கண், மூக்கு, காது, சிறுநீர், மலம் கழிப்பதற்கான வாயில்கள் ஆகிய ஒன்பது வழி. காட்டில் - இடுகாட்டில். நாட்டி - மனத்தில் நிலையாக எழுந்தருளச்செய்து. நாண்மலர் - புதியமலர்கள். வாட்டம் - துன்பம். |
|