|
பாடல் எண் :1892 | புனையும் மாமலர் கொண்டு புரிசடை நனையும் மாமலர் சூடிய நம்பனைக் கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை நினைய வேவினை யாயின நீங்குமே. |
| 3 | பொ-ரை: மாமலர்களைக்கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும். கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும். கு-ரை: புனையும் - அலங்கரியுங்கள். மாமலர்கொண்டு - சிறந்த மலர்களைக் கொண்டு, புனையும் என்க. புரிசடை - முறுக்குண்ட நனையும் மாமலர் சூடிய. நனையும் மாமலரும் என்க. நனை - அரும்பு. கனையும் - ஒலிக்கின்ற. வார்கடல் - நீண்டகடல். |
|