|
பாடல் எண் :1894 | மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக் கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை மைய னுக்கிய கண்டனை வானவர் ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. |
| 5 | பொ-ரை: உண்மையே உருவானவனும், விடையை ஊர்தியாகக்கொண்டவனும், வெண்மழுவைக் கையிற்கொண்டவனும், நாகைக்காரோணனும், ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை. கு-ரை: மெய்யன்-உண்மையின் வடிவாய் விளங்குகின்றவன். வெண்மழுக்கையன்-வெள்ளிய மழுவாயுதத்தைக் கையின்கண் உடையவன். மை-கரியவிடம். அனுக்கிய-வருத்திய, வென்ற. விடத்தினை மாற்றிய நீலகண்டன் என்க. "பிறையனுக்கிய செஞ்சீறடி" வானவர் ஐயன் - தேவர்கள் தலைவன். |
|