|
பாடல் எண் :1898 | கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை இருவ ருக்கறி வொண்ணா இறைவனை ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த செருவ னைத்தொழத் தீவினை தீருமே. |
| 9 | பொ-ரை: உலகிற்கெல்லாம் கருவாகியவனும். கடல்நாகைக் காரோணனும், பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும், ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும். கு-ரை:கருவன் - மூலகாரணனாய் விளங்குபவன். இருவர் - திருமால் பிரமன். ஒருவன் - ஏகன். அழியாதவன் தானொருவனேயாகலின் ஏகன் என்றார். உணரார் - பகைவர். செருவன் - முப்புர மெரித்தலாகிய போரைச் செய்தவன். |
|