|
பாடல் எண் :1899 | கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன் வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை அடர வூன்றிய பாத மணைதரத் தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே. |
| 10 | பொ-ரை: கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான். கு-ரை: கடற்கழி தழீஇய, அகரம்தொக்கது. தழி - தழுவுதலை உடையது. வடவரை - வடக்கின்கண் உளதாய திருக்கயிலைத் திருமலை. ஆர்த்த - செருக்கினால் ஆரவாரித்த, அடர - இறக்குமாறு வருத்த. அணைதர - நெருங்கித்தொழ. காலன் தொடர அஞ்சும். அஞ்சும் - அஞ்சுவான். துயக்கு - துன்பம். |
|