|
பாடல் எண் :1903 | அருத்த மும்மனை யாளொடு மக்களும் பொருத்த மில்லைபொல்லாதது போக்கிடும் கருத்தன் கண்ணுத லண்ணல்காட் டுப்பள்ளித் திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே. |
| 4 | பொ-ரை: பொருளும், மனைவியோடு மக்களும் பொருத்தம் இல்லை; பொல்லாத தீமை போக்கிடும் கருத்தனும், நெற்றிக்கண்ணுடைய அண்ணலும் ஆகிய காட்டுப்பள்ளித் திருத்தன் சேவடியைச் சென்று சேர்வீராக. கு-ரை: அருத்தமும் - செல்வமும். பொருத்தமில்லை - நம்மோடு பொருந்தியன அல்ல. பொல்லாதது போக்கிடும் கருத்தன் - தீயனவற்றை நீக்கியருளும் மூலகாரணன். திருத்தன் - அழகியன். |
|