|
பாடல் எண் :1904 | சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும் அற்ற போதணை யாரவ ரென்றென்றே கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப் பெற்ற மேறும் பிரானடி சேர்மினே. |
| 5 | பொ-ரை: சுற்றத்தாரும் துணைவியும் மனைவாழ்க்கையும், உயிர் உடலைவிட்டு நீங்கியபோது பொருந்தாதவர்கள் என்று, கற்றவர்கள் கருதுகின்ற காட்டுப்பள்ளியில் இடபம் ஏறிய பெருமான் அடி சேர்வீராக. கு-ரை: துணை - மனைவி. அற்றபோது - உயிர் நீங்கிய காலத்து. அணையார் - நம்மொடு உடன் வாரார். பெற்றம் - எருது. |
|