|
பாடல் எண் :1916 | வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர் உந்தி யோடி நரகத் திடாமுனம் அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார் சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே. |
| 3 | பொ-ரை: வந்து இவ்வாறு வளைத்தெழுகின்ற எமதூதுவர்கள் மனம் உந்துதலால் ஓடி நரகத்து இடுவதன் முன்னம் அந்தியின் செவ்வொளி தாங்கிய மேனியராகிய வாட்போக்கியிறைவர் தம்மைச் சிந்தித்து எழுவார்களின் வினை தீர்ப்பர். கு-ரை: இவ்வாறு - இவ்விடம். உந்தி - நும்மைச் செலுத்தி. அந்தியின்னொளி - செவ்வொளி. |
|