|
பாடல் எண் :1922 | கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர் பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க் கிட்ட மாகி இணையடி யேத்துமே. |
| 9 | பொ-ரை: கட்டுக்களை அறுத்து விரைந்து எழுந்த எமதூதுவர்கள் புறப்படுவதற்கு முன்பே, எட்டுப் பூக்களைச் சூடும் வாட்போக்கி இறைவர்க்கு விருப்பம் உடையவராகித் திருவடி ஏத்துவீராக. கு-ரை: கட்டுஅறுத்து - நாம் இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டுள்ள பிணிப்பை நீக்கி. கடிதுஎழு - விரைவாய்ப் புறப்பட்டு வரும். பொட்ட நூக்கிப் புறப்படாமுன்னம் - உயிரைக் கவரும் நோக்கோடு விரைந்து வருமுன். அட்ட மாமலர் - எட்டுமலர்கள். இட்டமாகி - விருப்பத்தை உடையவராகி. இணையடி - இரண்டு திருவடிகளை. ஏத்தும் - வணங்குங்கள். |
|