|
பாடல் எண் :1937 | ஓது பைங்கிளிக் கொண்பா லமுதூட்டிப் பாது காத்துப் பலபல கற்பித்து மாது தான்மரு கற்பெரு மானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே. |
| 4 | பொ-ரை: இப்பெண் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைக்கு ஒள்ளிய பால் அமுது ஊட்டிப் பின் அதனைப் பாதுகாத்துப் பலபல வார்த்தைகளை அதற்குக் கற்பித்து மருகற் பெருமானுக்குத் தூது சொல்லிவிடத் தொடங்குகின்றாள். கு-ரை: ஓது - சொன்னது கேட்டுப் பதிகங்களையும் வேதங்களையும் பேசுகின்ற. பைங்கிளிக்கு - பச்சைக்கிளிக்கு. ஒண்பால் அமுது ஊட்டி - சிறந்த பால் உணவை உண்பித்து. அட்டி எனவும் பாடம், பாதுகாத்து - அதைப் பறந்து போகாமலும் இறந்து போகாமலும் பேணி. மாதுதான் - மருகற்பெருமான்மேல் காதல்கொண்ட ஒரு பெண். தான் இரண்டும் அசை. |
|