|
பாடல் எண் :1942 | கந்த வார்குழல் கட்டிலள் காரிகை அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக வந்தி டாய்மரு கற்பெரு மானென்று சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே. |
| 9 | பொ-ரை: மணம் வீசும் நீண்ட கூந்தலை முடியாதவளாய் இப்பெண், மால்விடையோடும் மிக்க அன்பாய் "மருகற்பெருமானே! வந்திடாய்!" என்று சிந்தித்து வாராமையாற் பின்னும் திகைப்பாள்; காண்பீராக. கு-ரை: கந்தம் - மணம் பொருந்திய. வார் - நீண்ட. குழல் - கூந்தல். கட்டிலள் - முடித்தாளில்லை. காரிகை - தலைவி. அந்தி - அந்திப்பொழுதின்கண். மால் விடையோடும் - திருமாலாகிய இடபத்தோடும். அன்பாய் - காதலாய். வந்திடாய் - வருவாயாக. மருகற்பெருமானே வந்திடாய் என்று என்க. சிந்தைசெய்து - மனத்தினால் எண்ணி. திகைத்திடும் - திகைப்பெய்தி நிற்கும். |
|