|
பாடல் எண் :1948 | அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை அஞ்சு போலரை யார்த்ததின் தத்துவம் அஞ்சு மஞ்சுமோ ரோரஞ்சு மாயவன் அஞ்சு மாமெம் அகத்துறை யாதியே. |
| 5 | பொ-ரை: என் அகத்து உறை ஆதி. ஆனைந்து ஆடி. ஐந்தொழில் நடனம் ஆடி. இடையில் ஐந்தலை அரவார்த்தவன் அவன். தத்துவங்களாகிய இருபத்தைந்தின் கூறானவன். கு-ரை: அஞ்சும் அஞ்சும் - ஐந்து வகையான பசுக்களிலிருந்து உண்டாம் ஐந்து பொருள்களையும். அஞ்சும் ஆடி - பஞ்சகவ்வியங்கள் ஐந்தையும் அபிஷேகம் கொண்டு. ஓர் அஞ்சும் - ஒப்பற்ற ஐந்தொழில்களையும். ஆடி - கூத்தின் தத்துவங்களாய் அமைய ஆடி. "ஐந்துகொலாம் அவர் ஆடினதாமே" (தி.4.ப.18.பா.5). அஞ்சுபோல் அரை ஆர்த்த - அரையில் கட்டியது ஐந்தலையரவு என்பதாம். "அஞ்சுகொலாம் அவர் ஆடரவின்படம்" (தி.4.ப.18.பா.5). அஞ்சும் அஞ்சும் ஓர் ஓர் அஞ்சும் ஆயவன் - ஐம்பூதங்கள், ஐந்து தன் மாத்திரைகள், ஞானேந்திரியங்கள் ஐந்து. கன்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இருபது தத்துவங்கள். அஞ்சுமாம் - ஐம்புலன்களும் ஆகும். |
|