|
பாடல் எண் :1951 | எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில் எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே. |
| 8 | பொ-ரை: அட்டமூர்த்தியாய்த் தொழில் செய்பவன். எண்குணன். எம் இறைவனாயுள்ள அவ்வெட்டுமூர்த்தி என்னுள்ளத்து எட்டும் மூர்த்தியாய் ஒடுங்கியிருப்பன். கு-ரை: எட்டுமூர்த்தி - இறைவனது அட்டமூர்த்தவடிவம். ஐம்பூதம், சூரியன், சந்திரன், ஆன்மா, எட்டு வான்குணம் - தன்வயத்தனாதல் முதலிய எட்டு உயரிய குணம். எட்டுமூர்த்தி - நிலம் முதலியவற்றிற்குரிய தேவர்கள். அவ்வெட்டு மூர்த்தி என்றே பின்னும் கொள்க. |
|