பாடல் எண் :1964
ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மணி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.

1
பொ-ரை: தமக்குமேல் தலைவன் இல்லாதவன். உள்ளக்கோயிலான். குணக்குன்று. வாழ்த்துவோர் வாய் இல்லமாக உடையவன். சத்தியை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.
கு-ரை: ஏயிலான் - தமக்குமேல் தலைவன் இல்லாதவன். இச்சை அகம்படிக்கோயில் - அன்பாலாகிய உள்ளக்கோயில். வாயிலான் - வாழ்த்தும் இவரது வாயை இல்லாக உடையவன். மனோண்மனியைப் பெற்றதாயிலான் - "இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்" (தி.8 திருவாசகம் - 207) "அரனுக்குத் தாயும் மகளும் நற்றாரமுமாமே" (தி.10.த.4-8.பா.24) நவந்தரு பேதங்களில் மனோன்மணி என்பது ஒரு சத்திபேதம். "சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்" (சித்தியார் - சுபக்கம்.77).