|
பாடல் எண் :1975 | கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார் ஆர்க ளாகிலு மாக அவர்களை நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே. |
| 3 | பொ-ரை: கார்காலத்திலே மலர்தலைக்கொண்ட கொன்றையின் மணமிக்க மலர்களைக் கண்ணியாக அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக; அவர்களை நீர் சாரப்பெறாதீர்; நீங்குவீராக. கு-ரை: கார் காலத்தே மலர்தலைக் கொண்ட. கடிமலர் - மணம் பொருந்திய மலர். கண்ணியான் - தலை மாலையை உடையவன். சீர் கொள் நாமம் - சிறப்பைக்கொண்ட திருப்பெயர். சிவன் என்று - சிவபெருமான் என்று. அரற்றுவார் - பலகாலும் சொல்வார்கள். ஆர்களாகிலும் ஆக - யாராயிருந்தாலும் இருக்கட்டும். நீர்கள் - நீங்கள். சாரப்பெறீர் - அடையாதீர்கள் இங்கும் நீங்குமே. |
|