|
பாடல் எண் :1976 | சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன் சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப் போற்றி யென்றுரைப் பார்புடை போகலே. |
| 4 | பொ-ரை: சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும், காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல். கு-ரை: சாற்றினேன் - சொன்னேன். நீள்சடைமுடி - நீண்டசடை முடியை உடைய. சீற்றம் - கோபம். காமன்கண் சீற்றம் வைத்தவன் - காமனைச் சினந்து எரித்தவன். சேவடி - திருவடிகளை. ஆற்றவும் - மிகவும். களிப்பட்ட - களிப்படைந்த. மனத்தராய் - மனத்தை உடையவராய். போற்றியென்றுரைப்பார் புடை - போற்றி என்று சொல்பவர்களின் பக்கத்தில். போகல் - செல்லாதீர்கள். |
|