|
பாடல் எண் :1985 | புந்திக் குவிளக் காய புராணனைச் சந்திக் கண்நட மாடுஞ் சதுரனை அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே. |
| 2 | பொ-ரை: புத்திக்கு விளக்காக உள்ள மிகப்பழமையனும், நடம் ஆடும் சதுரப்பாடு உடையவனும், அந்திச்செவ்வண்ணம் உடையவனும், நிறைந்த அழல்கொண்ட மூர்த்தியும், வந்து என்னுள்ளம் கொண்டவனுமாகிய பெருமானை மறப்பேனோ? கு-ரை: புந்திக்கு - அறிவுக்கு. புராணன் - பழையவன். சந்தி - இரவு. சதுரன் - சதுரப்பாடுடையன். அந்தி வண்ணன் - செம்மேனியன். ஆரழல்மூர்த்தி - அரிய நெருப்பின் வடிவமாயவன். வந்து என் உள்ளம் கொண்டானை - தோன்றி என் மனத்தை இடமாக் கொண்டவனை. மறப்பனே - மறப்பேனோ? |
|