பாடல் எண் :1986
ஈச னீசனென் றென்று மரற்றுவன்
ஈசன் தானென் மனத்திற் பிரிவிலன்
ஈசன் தன்னையு மென்மனத் துக்கொண்டு
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.

3
பொ-ரை: ஈசன் ஈசன் என்றும் வாய்விட்டு அரற்றுவேன்; ஈசன் என் மனத்தில் பிரிவில்லாதவனாய் உள்ளான் - ஈசனையும் என் மனத்துக்கொண்டபின், தன்னை யான் மறக்கும் வல்லமை உடையேனோ?
கு-ரை: என்றும் - எப்பொழுதும். அரற்றுவன் - சொல்லிக் கொண்டிருப்பேன். பிரிவிலன் - நீங்காது எழுந்தருளியிருப்பவன். மறக்கிற்பனே - மறப்பேனோ?