|
பாடல் எண் :1989 | கன்ன லைக்கரும் பூறிய தேறலை மின்ன னைமின் னனைய உருவனைப் பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய என்ன னையினி யான்மறக் கிற்பனே. |
| 6 | பொ-ரை: கன்னலும், கரும்பின் ஊறிய சாற்றுத் தெளிவு போல்வானும், ஒளியை உடையவனும், மின்னலைப் போன்ற உருவம் உடையவனும், பொன்போலும் மேனியின்னும் ஆகிய மாணிக்கக் குன்றுபோல் விளங்கும் என்னை உடையானை, இனியான் மறக்கும் வல்லமை உடையேனோ? கு-ரை: கன்னலை - கரும்பை. கரும்பூறிய கன்னலை. தேறலை - கரும்பினிடத்தே ஊறிய சாற்றை. தேறலை - தேனை. மின்னனை - மின்னல் வடிவாயிருப்பவனை. மின்னனைய உருவனை - மின்னல் போன்ற ஒளிவடிவினனை. பொன்னனை - பொன் போன்றவனை. மணிக்குன்று பிறங்கிய - சிறந்த மாணிக்க மலையாய் விளங்கிய. என்னனை - என்னுடைய பொருளாயுள்ளவனை. |
|