|
பாடல் எண் :1994 | அண்டத் தானை யமரர் தொழப்படும் பண்டத் தானைப் பவித்திர மார்திரு முண்டத் தானைமுறை றாத இளம்பிறைத் துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே. |
| 1 | பொ-ரை: அண்டத்தில் உள்ளவனும், தேவர்களால் தொழப்படும் பொருளும், பவித்துரம் உடைய நெற்றியை உடையவனும், இளம் பிறைப் பிளவினைச் சூடியவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக. கு-ரை: அண்டத்தானை - உலகங்களினை வடிவானவனை. அமரர் தொழப்படும் - தேவர்களால் தொழப்படுகின்ற. பண்டத்தானை - உறுதிப்பொருளை. பவித்திரம் ஆர் திருமுண்டத்தான் - தூய்மை பொருந்திய அழகிய திருநீற்றை அணிந்த நெற்றியை உடையவன். பவித்திரம் என்பதற்குக் காணிக்கைப் பாத்திரம் எனவும் பொருளுண்டு. முண்டம் - நெற்றி. |
|