பாடல் எண் :1996
பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்
வண்ணத் தானை வகையுணர் வான்றனை
எண்ணத் தானை யிளம்பிறை போல்வெள்ளைச்
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

3
பொ-ரை: பண் ஓத்தவனும், பவளம் திரண்டது போன்ற செவ்வண்ணம் உடையவனும், வகைகளையெல்லாம் உணர்பவனும், அடியார்கள் எண்ணத்தில் இருப்பவனும், இளம்பிறை போன்ற வெண்சுண்ணம் உடையவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
கு-ரை: பண் - இசை. வண்ணம் - நிறம். வகை உணர்வான் தனை - நாம் செய்யும் பல்வகைக் கூறுபாடுகறையும் உணர்பவனை. எண்ணத்தானை - நம் எண்ணமாக இருப்பவனை. வெள்ளச சுண்ணம் - திருநீறு.