பாடல் எண் :1998
பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
பிரிதி யானைப் பிறரறி யாததோர்
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.

5
பொ-ரை: ஞானசூரியனாக உள்ளவனும், பல்வேறு சமயங்களாற் கருதப்பட்டவன்னம், கண்டார் மனத்தை விரும்பியமர்ந்தவனும், பிறர் அறியாததோர் சுருதியானும் ஆஇய பெருமானே, தொழத்தக்கவன்; காண்பீராக.
கு-ரை:பரிதியான் - சூரியனாக இருப்பவன். பல்வேறு சமயங்களால் கருதப்படுவன் எனக. "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்" "அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர்பொருளாய்" சித்தியார்-சுபக்கம்.25.1) எனும் பாடல்கள் காண்க. கண்டார் - மெய்ப்பொருள் காட்சியைக் கண்டவர்கள். பிரிதியான் - ப்ரீதி என்னும் வடசொல் தமிழில் பிரிதி என்றுவரும். விருப்பம் என்பது பொருள்.