|
பாடல் எண் :2004 | முற்றி னானை இராவணன் நீண்முடி ஒற்றி னானை யொருவிர லாலுறப் பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச் சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே. |
| 11 | பொ-ரை: எல்லாவற்றையும் சூழ்ந்திருபவனும், இராவணன் நீண்முடிகளை ஒற்றியபோது ஒரு விரலால் உறப்பற்றியவனும், ஒரு வெண்டலை உடையவனும், பாம்பினை அரைக்கண் சுற்றியவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. கு-ரை: இராவணன் நீண்முடி முற்றினான் - இராவணனது நீண்ட முடியை முறியச்செய்தான். ஒரு விரலால் உறநெறி ஒற்றினான் - கால் விரல் ஒன்றினால் ஒற்றியவன். ஓர் வெண்தலை பற்றினான் - பிரமனது ஒரு தலையைக் கையில் தாங்கியவன். அரை - இடை. |
|