|
பாடல் எண் :2010 | மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர் நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர் உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே. |
| 6 | பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறிவுடன்கூடி ஒளிநிற வண்ணனாகிய பெருமானை, மரங்களில் ஏறிமலர்பறித்திட்டிலராய், நிரம்ப நீர் சுமந்து அபிடேகித்து நினைந்திலராய் ஆணவம் நிரம்பக் காண முயன்று காண்கிலர் ஆயினர். கு-ரை: மரங்கள் - பூமரங்கள். நிரம்ப - நிறைய. ஆட்டி - அபிடேகித்து. நினைந்திலர் - நினையாதவராயினார். உரம் - செருக்கோடு கூடிய வலிமை. நிரம்ப - முழுமையாய். |
|