|
பாடல் எண் :2011 | கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர் அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர் சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய பட்ட கட்டமுற் றாரங் கிருவரே. |
| 7 | பொ-ரை: திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கட்டுவாங்கமும் கபாலமும் கைக்கொள்ளாதவராய், எட்டுறுப்புக்களும் நிலத்துப்படக்கிடந்து அடிதாழாதவராய் இறைவன் சேவடியும் திருமுடியும்காணுதற்குச் சென்றெய்திப் பொருந்திய துயரங்கள் உற்றார் அடிமுடி காண்கிலர். கு-ரை: கட்டுவாங்கம் - கையில் அணியும் ஓர் ஆயுதம். கபாலம் - மண்டையோடு. கைக்கொண்டிலர் - தாங்கியிருக்கும் உண்மையை உணராராயினர். அட்டமாங்கம் கிடந்து - எட்டு உறுப்புக்களும் நிலத்திலே படிய வீழ்ந்து. அடி வீழ்ந்திலர் - திருவடிகளை வணங்காராயினர். சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன். காணிய - காணும் பொருட்டு. பட்டகட்டம் - உண்டான துன்பங்கள் பலவற்றையும். |
|