|
பாடல் எண் :2015 | செங்க ணானும் பிரமனுந் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர் இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. |
| 11 | பொ-ரை: செங்கண் உடையவனாந் திருமாலும், பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காண்கின்ற வல்லமை இல்லாதவர்களுக்கு ஆறி பொங்கும் செஞ்சடையை உடைய புண்ணியக் கடவுளாம் இறைவன் "இங்கு உற்றேன்" என்று இலிங்க வடிவில் தோன்றினான். கு-ரை: செங்கணான் - திருமால். இலிங்கத்தே - சிவ இலிங்கத் திருவுருவத்தின்கண்ணே. பொங்கு - மிக்க. புண்ணியமூர்த்தி - புண்ணியந்திரண்ட வடிவான தலைவன். |
|