பாடல் எண் :2019
மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்
குறையு மாயினை கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை யெந்தை பிரானிரே.

4
பொ-ரை: எந்தை பெருமானே! வேதங்களையும் பாடுவீர்; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர்; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை.
கு-ரை: மறையும் - வேதங்களையும், மாதவர் மாலினுக்கு- தாருகாவனத்து மினிவர். குறையும் மயக்கத்திற்கு - மயக்காகிய குறையாகவும். கோளரவு - கொள்ளும் தன்மையதாய பாம்பு. பிறிது - வேறு. இறையும் - சிறிதும்.