|
பாடல் எண் :2024 | கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை எப்பற் றியறி தற்கரி யாயருள் அப்பற் றல்லது மற்றடி நாயினேன் எப்பற் றும்மிலே னெந்தை பிரானிரே. |
| 9 | பொ-ரை: திருமாலால் அறிதற்கரியவனே! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை. கு-ரை: திருமால் பிரமன் - திருமாலும் பிரமனும். எய்ப்பு அற்று - துன்பம் இன்றி. உன்னை எப்பெற்றியுடையவன் என்று அறிதற்கு அரியவனே என்க. கைப்பற்றியருள் எனக் கூட்டுக. |
|