|
பாடல் எண் :2025 | எந்தை யெம்பிரா னென்றவர் மேல்மனம் எந்தை யெம்பிரா னென்றிறைஞ் சித்தொழு தெந்தை யெம்பிரா னென்றடி யேத்துவார் எந்தை யெம்பிரா னென்றடி சேர்வரே. |
| 10 | பொ-ரை: எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர். கு-ரை: என்றவர் மேல் - என்று கூறியவரிடத்து. மனம் - மனம் பொருந்த. என்று - என்றும் கூறி. இறைஞ்சி - தலைகுனிந்து. தொழுவார் - வணங்குவார். இறைவன் அடியார்களை இறைவனாகவே கருதி வணங்குவார் என்க. அடியாரை வழிபட்ட பிறகு பெருமானை எந்தை எம்பிரான் என்று எல்லாரும் போற்றி. அடிசேர்வர் - இறைவனது திருவடியை அடைவார்கள். |
|