|
பாடல் எண் :2032 | ஊரிலாயென்றொன் றாக உரைப்பதோர் பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா காரு லாங்கண்ட னேயுன் கழலடி சேர்வி லார்கட்டுகுத் தீயவை தீயவை. |
| 7 | பொ-ரை: தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ஓன்றாக உரைக்கும் பேரில்லாதவனே பிறைசூடிய பிஞ்ஞகனே கருமை பொருந்திய திருக்கழுத்தினனே உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவை என்றும் சேரும். கு-ரை: ஊரிலாய் - தனக்கென ஓர் ஊர் இல்லாதவன் என்று - இது என்று ஒன்றாக உரைப்பது - ஒன்று சொல்லுவதற்குரிய பேர் இலாய் பெயர்இல்லாதவன் கார் உலாம் - கருமை நிறம் பொருந்திய கண்டனே - கழுத்தை உடையவனே கழலடி - கழலணிந்த திருவடிகள் சேர்விலார்கட்கு - அடையாதவர்கட்கு தீயவை - தீமை தருவனவான தீவினைகள் தீயவே - துன்பந்தருவனவே அடிசேர்ந்தார்க்குத் தீயவும் நல்லவாம் என்றபடி. |
|