பாடல் எண் :2036
ஒருவ னாகிநின் றானிவ வுலகெலாம்
ஒருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராஅரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே.

11
பொ-ரை: இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும், திருமாலும் பிரனுமாகிய இருவராகி நின்றவர் அறியஇயலாதவனும், அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந் கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும்.
கு-ரை: இவ்வுலகெலாம் - இவ்வுலகங்கள் எல்லாவற்றிக்கும் ஒருவனாகி நின்றான் - தலைவானாவான் இவன் ஒருவனேயாக இருப்பவன் இருவர் - திருமால் பிரமன் அரு - அரிய அரா - பாம்பு அரை - இடை ஆர்கழல் - பொருந்திய கழலை அணிந்த திருவடி பறையும் - நீங்கும்.