பாடல் எண் :2040
கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.

15
பொ-ரை: அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் அதுவே அவர் தன்மை.
கு-ரை: தீ நிறவண்ணன் - சிவந்த நிறத்தையுடையவன் இங்க ணார் - இங்கு எளிதில் வருபவர் இவ்வுலகில் அருள் வழங்க எழுந்தருளியிருப்பவர். எழில் வானம் - அழகிய வானுலக மக்கள் அங்கணாற்கு - அங்கணனுக்கு அவன் தன்மை அது என்க. ஆல் - அசை.