பாடல் எண் :2041
ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.

16
பொ-ரை: நல்ல நெஞ்சே வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக் கொண்டு உய்யப்போதலுற்றால், மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும்.
கு-ரை: ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான் படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார். நுகர - போகம் பலவற்றையும் அனுபவிக்க உய்யப்போக்குறில் - வாழ்விக்கச் செலுத்துவாயேயானால், மகர வெல்கொடி - மகர மீன் பொருந்திய முற்றத்துறந்தாரையும் வெற்றி காணும் கொடி வெல்கொடி வினைத்தொகை.
மைந்தன் - இளையனாகிய காமன் . காய்ந்தவன் - எரிந்தவன் புகரில் - குற்றமற்ற புகலாகும் - அடைக்கலமாம் இடமாகும்.