|
பாடல் எண் :2042 | சரண மாம்படி யார்பிற ரியாவரோ கரணந் தீர்த்துயிர் கையி லிகர்ந்தபின் மரண மெய்திய பின்னவை நீக்குவான் அரண மூஎணில் எணிதவ னல்லனே. |
| 17 | பொ-ரை: புகலடையத்தக்கவர் பிறர் யாவர்? செயலற்று உயிர் இறக்கம்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன்? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ? கு-ரை: சரணமாம் படியார் - திருவடிகளில் அடைக்கலமாக அடைதற்குரிய தன்மையினர் பிறர்யாவர் என்க. சிவபெருமானைத் தவிரப் பிறர் யார் உள்ளனர். கரணம் - அந்தக்கரணங்கள், கையில் இகழ்ந்தபின் - கைவிட்டபின், நவை - வினைக்குற்றங்கள் அரண மூஎயில் அரணமைந்த மூன்று கோட்டைகள். |
|