பாடல் எண் :2043
ஞமனென் பான்நர கர்க்க நமக்கெலாம்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.

18
பொ-ரை: நரகர்க்கெல்லாம் ஞமனாகியும், நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும், மான்குட்டி உடைய கையினனும், விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனம் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும்.
கு-ரை: நரகர்க்கு - மக்களில் இழிந்தவர்க்கு எமன் என்பான் - இயமனாக இருப்பவன், மான்மறி - மான்கட்டி கவனம் - வேகநடை கனவிடை - பெரியதாய எருது ஊர்தி - வாகனம் தமர் என்றாலும் - பெருமானுடைய சுற்றத்தினர் என்று கூறினாலும், தடுமாற்றம் கெடும்- ஐயுறவு நீங்கும்.