பாடல் எண் :2046
தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.

21
பொ-ரை: தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினையாளர்களே தானே தருமமாகவும், தானே தவமாகவும், தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது, அரிய மருந்து போன்ற (அமிர்தம்) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகைச் சேர்வீராக.
கு-ரை: தருமம், கவம், கருமம், முதவியனவாய் இருப்பவன் கருமம்-செயல், கருமான்மறி - வலிய மான்குட்டி அருமருந்தன்ன என்பது அருமந்தன்ன என்றாயது. அதிர்-ஒலிக்கின்ற சிரமம்சேர் அழல் தீவினை - வருத்தத்தைத் தரும் நெருப்புப் போன்ற தீய வினைகள்.