|
பாடல் எண் :2048 | பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச் சொற்பல் காலநின் றேத்துமின் தொல்வினை வெற்பில் தோன்றிய வெங்கதில் கண்டவப் புற்ப னிக்கெடு மாறது போலுமே. |
| 23 | பொ-ரை: பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக. உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக் கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும். கு-ரை: பற்பல்காலம்- பலப்பலகாலம் பயிற்றி - சொல்லி சொற்பல்காலம் - புகழ்ச் சொற்களால்பலகாலம் தொல்வினை - பழவினை வெற்பில்- உதயகிரியில் வெங்கதிர் - சூரியன் புற்பனி - புல்லின் முனையில் உள்ள பனித்துளிகள். |
|