|
பாடல் எண் :2051 | அரவ மார்த்தன லாடிய அண்ணலைப் பரவு வாரவர் பாவம் பறைதற்குக் குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல் கரவில் நான்முக னுங்கரி யல்லரே. |
| 26 | பொ-ரை: பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும், குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ? கு-ரை: அரவம் - பாம்பு. ஆர்த்த - கட்டிய. மறைதற்கு - நீங்குதற்கு. குரவை - பேயோடு கைகோர்த்து ஆடும் திருமால் கூத்து. குளிர்போதின்மேல் - குளிர்ந்த தாமரைப்பூவின் மேல் (உறையும்). கரவில் - வஞ்சனையில்லாத; கரியல்லர் - சாட்சியாவார் இல்லை. |
|